முக்கிய செய்திகள்

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் : பேனருடன் சிட்னி மைதானத்தில் திரண்ட தமிழர்கள்…

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்ற பதாகையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்டை பார்க்க இந்திய ரசிகர்கள் பலர் வந்திருந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் என சில தமிழர்கள் பதாகைகளுடன் வந்திருந்தனர்,

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டி20 போட்டி முடிவில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை இருந்தது.

இன்று 3வது டி20 போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 164 ரன்களை குவித்துள்ளது.

165 ரன் இலக்கை விரட்டிய இந்தியாவுக்கு சிகர் தவான் 41, விராட் கோலி 61 ரன்கள் எடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.