
“தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழ வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்ன்னேற்றத்தையும் உறுதிபடுத்தும் செயல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேமிப்பு ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது, சேமிப்பை சரியான வீதத்தில் முதலீடு செய்வது அவசியம் என்று கூறினார்.