பாரத ஸ்டேட் வங்கி (sbi) 2056 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

பாரத ஸ்டேட் வங்கி 2056 Probationary Officer அதிகாரிகள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வெளியிட்டுள்ளது . அக்டோபர் 5ம் தேதியான இன்று தொடங்கி 25.10.2021 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நாடு முழுவதும் காலியாக உள்ள 2056 புரொபசனரி அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு பிரிமிமினரி தேர்வு, மெயின் தேர்வு , நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று விதமான தேர்வுகளுக்கு பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
மொத்த காலியிடங்கள்: 2056 (எஸ்சி 324, எஸ்டி 162, ஒபிசி 560, ews 200, பொது 810, மாற்றுத்திறனாளிகள் 80) பணியின் பெயர் Probationary Officer பணியிடம்: நாடு முழுவதும் பணிக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் 5.10.2021 முதல் 25.10.2021 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் 31.12.2021க்குள் படித்து முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழை நேர்முகத்தேர்வுக்கு வரும்போது சமர்பிக்க வேண்டும். 59.99% சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்கள் 60 சதவீதத்திற்கு கீழ் எடுத்தவர்களாவே கருதப்படுவார்கள். அதேபோல் 54.99% சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்கள் 55 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண் எடுத்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

வயது தகுதி: பொதுப்பிரிவினர் 02.4.2021க்கு பின்னர் அல்லது 1.02.2000க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது 30வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகையும், ஒபிசி பிரிவினருக்கு (non creamy layer) 3ஆண்டுகள் வயது சலுகையும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது சலுகை உள்ளது. குறிப்பு கிரிடிட் கார்டு அல்லது வங்கியில் ஏதேனும் கடன் வாங்கி பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதால் சிபில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை: எஸ்பிஐ Probationary Officers பணியிடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அவற்றின் விவரம் https://sbi.co.in/web/careers , https://bank.sbi/careers. ஆகிய இணைதளத்தைபாருங்கள், மற்ற எந்த இணையதளத்தில் வரும் தகவல்களையும் நம்பி ஏமாற வேண்டாம். வேலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அறிவிப்புகளை இந்த இணையதளங்களில் தெளிவாக பார்க்கலாம். 5.10.2021 முதல் 25.10.2021 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 25ம் தேதி தான் கடைசி தேதி என்பதால் அதற்கு முன் விண்ணப்பித்துவிடுங்கள்.விண்ணபிக்க கட்டணம் உண்டு.

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்..

Recent Posts