பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பொதுப்பிரிவினரில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

அரசியல் சட்டத்தின் 15 மற்றும் 16 ஆவது பிரிவுகளில் திருத்தம் செய்யப்படுவதற்கான இதுதொடர்பான மசோதா, கடந்த மாதம் மாநிலங்களவை, மக்களைவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தெஹ்சீன் புல்வானா என்ற சமூக ஆர்வலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை இன்று (08.02.2018) விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, 10% இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த தடைவிதிக்க மறுத்து விட்டது.