முக்கிய செய்திகள்

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகள் : பள்ளி கல்வித் துறை எச்சரிக்கை..

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால்
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிடுள்ளது.

கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கொடூர சாதி வன்மம் திணிக்கப்பட்டு வருகிறது..

பள்ளி மாணவர்கள் தங்கள் சாதியை வெளிப்படுத்தும் விதமாக பல வண்ண கயிறுகளை கட்டி வருகின்றனர்.

இதனால் பள்ளிகளில் சாதிய வன்மம் தலைவிரித்தாட தொடங்கியிருக்கிறது எனலாம்.

இந்நிலையில் தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு இது குறித்த பள்ளி கல்வித்துறைக்கு கடிதம் எழுதியது.

இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளயது.