முக்கிய செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, கடலுார்(சிலபகுதிகளில்) பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலம், திட்டுக்குடி, வேப்பூர் தாலுகாக்களை தவிர்த்து அங்குள்ள மற்ற தாலுகாக்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.