முக்கிய செய்திகள்

பள்ளிக்கு அளித்த இடத்தை ஆக்கரமித்து குப்பைக்கிடங்கு : பொதுமக்கள் போராட்டம்..


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா சாலையில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு பஸ் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. குப்பை கிடங்கு அகற்றப்படும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த இடம் பள்ளிக்காக தானம் வழங்கப்பட்ட இடம். இதனுருக்கே தேனாறு உள்ளது. செம்பை ஊற்று இருந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டி அந்த இடத்தை சீர்கேடு அடையச் செய்துள்ளனர்.. அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.