பள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்..

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் உள்ளது.

9 முதல் 12-ம் வகுப்புகளில் தேர்வில் தோல்வி மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக பல மாணவ-மாணவிகள் பாதியிலேயே பள்ளி கல்வியை தொடராமல் நின்றுவிடுகின்றனர்.

இதுதொடர்பான ஆய்வை கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை நடத்தியது என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த ஆய்வு முடிவில், மாணவ-மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தடுப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 86.2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக இமாசல பிரதேசம் 85.8 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 85.6 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.