பள்ளி மாணவர்களின் தேர்வு சந்தேகங்களைப் போக்க இலவச எண் – 14417

தேர்வு தொடர்பான சந்தேகங்கள், எதிர்காலத்தில் என்ன மாதிரியான மேற்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்பன குறித்த தகவல்களை

பள்ளி மாணவர்கள் 14417 என்ற எண்ணில் இலவசமாக அழைத்து தெரிந்துகொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.