முக்கிய செய்திகள்

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘வருவாய்த்துறை வழங்கும் ஜாதி சான்றிதழ் தான் இறுதியானது.

எனவே பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில், இனி ஜாதியை குறிப்பிடக் கூடாது.

ஜாதி என்ற பிரிவில் வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும் என குறிப்பிடவும்,’ எனக் கூறப்பட்டுள்ளது.