பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். இவருக்கு வயது 76.ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்நாள் சாதனையாளர் 12 ஆராய்சி டாக்டர் பட்டம் பெற்றவர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும் இயல்பியல் துறையில் சாதனை படைத்த சாதனையாளர். இந்நுாற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியாவார்.

விதியே என்று சோர்ந்து கிடக்காமல், அறிவியலில் புதுப்புது விதிகளை ஆராயந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். இளம் வயதிலேயே நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, உடல் இயக்கம் முடங்கிய நிலையிலும் அறிவியல் கருவிகளின் துணையுடன் அண்டவியல் ஆய்வுகளை மேற்கொண்டு பல புத்தகங்களைத் தந்தவர். பேசமுடியாத நிலையிலும் தன் கன்னத்தின் அசைவுகளை கணினிக் குரல் மூலம் வெளிப்படுத்தியவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தன் சிந்தனைகளால் உலகத்தைச் சுழற்றியவர்.

கடவுள் இப்படிப் படைத்துவிட்டாரே என நினைக்காமல், மனித ஆற்றலினால் எதையும் எதிர்கொள்ள முடியும் என வாழ்ந்து காட்டிய பகுத்தறிவாளர். வல்லாதிக்கத்தை நோக்கி கேள்வி எழுப்பிய இடதுசாரி சிந்தனையாளர்.
அவர் எழுதிய A Brief Histroy of Time தமிழிலும் வெளியாகியுள்ளது.

76 வயது ஸ்டீபன் ஹாக்கிங் இன்று இறந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. அவர் என்றென்றும் வரலாற்றில் வாழ்கிறார்.