முக்கிய செய்திகள்

எஸ்.சி.,எஸ்.டி,சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அம்பத்தூரில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் 500 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறியில் காரணமாக சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நவஜுவன் விரைவு ரயில் மற்றும் அந்தமான் விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பல்லாவரத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் தேனாம்பேட்டை,தி.நகர் பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.