எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது..

பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று முன்தினம் அதிரடியாக உயர்த்தி இருந்தது.

அதில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணத்தை உயர்த்தி சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 2 மடங்கும் உயர்த்தி இருந்தது.

இந்நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வை திரும்பப்பெற்றது.

தேர்வு கட்டண உயர்வு தொகை டெல்லி அரசிடம் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

காங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு..

பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகள் : பள்ளி கல்வித் துறை எச்சரிக்கை..

Recent Posts