எல்லாத்துக்கும் ஆக.. ஆக.. என்ன ஆக?” என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நேற்று திருவாரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, திமுக, அதிமுக, பாஜகவை கடுமையாக சாடினார்.
”அப்போது திமுக மீது அதிகமாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது: “பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு ஒவ்வொரு வீட்டிலயும் போய் சொல்லுது திமுக. உன் வீட்ல சுவிட்ச் போட்டா என் வீட்டில எப்படிறா லைட் எரியும்.
5 மணி நேரம் மக்கள் பிரச்சனையை எழுதி வைச்சு படிக்காம நான் பேசறேன். 10 நிமிஷம் பேசிடு பார்க்கலாம். நீங்க “முக” ஸ்டாலின் கிடையாது.. “ஆக” ஸ்டாலின்!
பாரதிய ஜனதாவை முதன்முதலில் இங்கே எதுக்கு கூட்டி வந்தீங்க? கதவை திறந்து அவனுங்கள உள்ளே விட்டது யாரு? நீங்கதானே?
பொருளாதார அடிப்படையில 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தான் இல்லை..
நீங்க ஏன் அதை எதிர்க்கலை? மதவாதத்திற்கு எதிரினு கம்யூனிஸ்ட்காரங்க பேசிறீங்களே..
அவன் கொண்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏன் பேசலை? ரெண்டு பேரும் ஏன் பாஜகவுக்கு ஆதரவுன்னு பேசறீங்க?”
என ஆவேசமாக பேசினார்.