சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை சந்திக்க சென்ற யோகேந்திர யாதவ் தடுத்து நிறுத்தம்..


சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பை சேர்ந்த யோகேந்திர யாதவை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி வேறு இடத்திறகு அழைத்து சென்றனர்.

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களை சந்தித்து, ஆதரவு தெரிவிப்பதற்காக யோகேந்திர யாதவ், அங்கு சென்றார். அவரையும், உடன் சென்றவர்களையும் , செங்கம் அருகே போலீசார் தடுத்துநிறுத்தி அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக யோகேந்திர யாதவ் டுவிட்டரில் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், என்னையும், எனது குழுவினரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர் .

எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடுபவர்கள் விடுத்த அழைப்பின்பேரில் அங்கு சென்றோம். விவசாயிகளை நாங்கள் சந்திப்பதை தடுத்ததுடன், போன்களை பறிமுதல் செய்தனர்.

வலுக்கட்டாயமாக எங்களை போலீசார் வேனில் இழுத்து சென்றனர். நிலம் கையகபடுத்துதல் மற்றும் போலீஸ் தலையீடு குறித்து மாவட்ட கலெக்டரிடம் போனில் கேட்டேன்.

ஆனால், அதற்கு கலெக்டர் மறுப்பு தெரிவித்தார். சிறிதுநேரத்தில் போலீசார் வந்து எங்களை பிடித்து சென்றனர் என கூறினார்.