முக்கிய செய்திகள்

சேலம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை: 36.28 செ.மீ பதிவு..


சேலம் மாவட்டத்தில் கனமழை: 36.28 செ.மீ பதிவுசேலம்: சேலம் மாவட்டத்தில் விடியவிடிய பெய்த கன மழையால் 36.28 செ.மீ அளவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் மழை பெய்தது. இதனைஅடுத்து சேலத்தில் 13.38செ.மீ அளவும், ஏற்காட்டில் 11.68செ.மீ அளவும் மழை பதிவாகி உள்ளது.மேலும் சேலம் மாவட்டத்தில் சராசரி மழை அளவாக 2.4 செ.மீ அளவுமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலும் மழை பெய்ததை தொடர்ந்து ராசிபுரம் மதியம்பட்டி திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.