முக்கிய செய்திகள்

சேலம் அருகே வாகன சோதனைக்கு காரை நிறுத்தாமல் சென்றதால் டிடிவி தினகரன் மீது வழக்கு..

மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.

பரிசுப் பெட்டகம் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிடிவி தினகரன் மாநிலம் தழுவிய அளவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல சேலம் அருகே தினகரன் தனது காரில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்.

அப்போது, ஆச்சாங்குட்டப்பட்டி அருகே தினகரனின் காரை தேர்தல் அதிகாரிகள் வழிமறித்தனர்.

ஆனால், காரை நிறுத்தாமல் அவர் சென்றுவிட்டார். இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், டிடிவி தினகரன் மீது சேலம், வீராணம் காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.