
கரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி வரும் பிப்ரவரி-1-ஆம் தேதி முதல் பிப்ரவரி-20-ஆம் தேதி வரை கல்லுாரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிழல் நடைபெறும் என்றார்.
இறுதியாண்டு தேர்வு மட்டும் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என்று கூறினார்.