வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என திருவள்ளுவரை சிறுமைப்படுத்திய நாகசாமியை,
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திமுக கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு தமிழ்மொழி பற்றி எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் அந்த நிறுவனம் தத்தளித்து நிற்பதாகவும்,
2016-17 முதல் செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ,
விருதுகள் வழங்கி கவுரவிப்பதையோ, பா.ஜ.க. அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின்
“குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்” உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு,
ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அந்த குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.