திமுகவின் மூத்த தொண்டராகவும் கலைஞர் மீது தீரா பற்றுக் கொண்ட திராவிடக் கொள்கைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தொண்டாறிவரும் பாப்பாத்தி என்ற 74 வயது மூதாட்டி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் . இந்த நிகழ்வு குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74வயது பாப்பாத்தி என்ற அம்மையார் இன்று என்னையும் தலைவர் கலைஞர் அவர்களையும் சந்தித்தார். அப்போது அந்த அம்மையார் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியும், அவரைப் போன்ற பயன்கருதா தொண்டர்களின் இயக்கப் பற்றுமே திமுகவிற்கு நாளும் வலு சேர்க்கிறது.