முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் எம்யுஜே மோகன் மரணம்

 

தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாளரும், சென்னை பத்திரிகையாளர் சங்க பொது செயலாளருமான மோகன் இன்று (05.11.17 – ஞாயிறு) காலை காலமானார்.

சென்னை பத்திரிகையாளர் சங்கம்(எம்யுஜே) பொது செயலாளர் மோகன்(வயது 54). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஞாயிறன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது. மோகன் சென்னை தினகரன் நாளிதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். பத்திரிகை, ஊடக நண்பர்களிடம் அன்பாகப் பழகும் எளிமையான பண்புநலனும், அத்துடன் போர்க்குணமும் கொண்ட பத்திரிகையாளர் மோகனின் மரணம், தமிழ் பத்திரிகை உலகிற்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

 

Senior Jounalist MUJ Mohan no more