மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78 )சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அண்மையில் பத்மபூசண் விருது அளிக்கப்பட்ட நிலையில் வாணி ஜெயராம் தனது இல்லத்தில் தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு காலமானார்.
வேலுார் பிறந்த இவர் தலைசிறந்த பின்னணி பாடகியாக பலமொழிகளில் பாடி பல விருதுகளை வென்றுள்ளார். இவரின் இயற்பெயர் கலைவாணி தனது திருமணத்திற்கு பின் கணவரால் ஊக்குவிக்கப்பட்டு வங்கி பணியிலிருந்த அவர் இந்தி பாடல் மூலம் பின்னணி பாடகியாக தனது சினிமா வாழ்க்கையைத்துவங்கினார்.
தமிழில் ”மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா” என்ற வாலியின் வரிகளில் “தீர்த்தசுமங்கிலி“ சினிமா மூலம் பிரபலமானகி தமிழ் சினிமா ர சிகர்களை தன் குரலால் கவர்ந்தார்.
”அரங்கேற்ற வேளை”யில் “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” என நம்மை எல்லோரையும் மயக்கவைத்தார். முள்ளும் மலரில், “நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. நெய் மணக்கும் கத்திரிக்காய்…” என பட்டி தொட்டியெல்லாம் தமிழ் ரசிகர்களைக் கிறங்க வைத்தார்.
அவரின் இழப்பு தமிழ் ரசிகர்களுக்கு பேரிழப்பாகும், அவர் மறைந்தாலும் அவரின் குரல் என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை