முக்கிய செய்திகள்

இந்திய கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து..

இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சென்று நல்லகண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல இருக்கும்!

95லும் தொய்வில்லாப் போராளி- நல்லகண்ணு அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! என டிவிட்டரில் ம.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.