முக்கிய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும்,திமுக மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.