முக்கிய செய்திகள்

செப்.20 – 22 : 18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு : அண்ணா பல்கலை..துணை வேந்தர் சுரப்பா..

18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தமிழை டிஜிட்டல் வடிவத்திற்கு முழுமையாக கொண்டு செல்வதே மாநாட்டின் நோக்கம் என்றார்.

தமிழ் மொழியின் அடிப்படையில் இணையம் வழியாக அனைத்தையும் பயன்படுத்த முடியும் என்ற அவர், மென்பொருள் மேம்பாட்டை தமிழிலேயே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தையும் இணையத்தில் தமிழ் மொழியில் கொண்டுவந்தால்,

மாணவர்கள் பள்ளியில் பயிலும் போதே இணையம் வழியாக அறிவியல், தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்றும் தாய்மொழியில் கற்றால் தான்,

பாடங்களின் அடிப்படையை புரிந்துகொண்டு , உயர்கல்வி கற்க எளிதாக அமையும் என்றும் அவர் கூறினார்.