முக்கிய செய்திகள்

பாலியல் வழக்கில் உத்தரபிரதேச பாஜக தலைவர் சுவாமி சின்மயானந்த் கைது…

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் சின்மயானந்த்கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சின்மயானந்த் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.