முக்கிய செய்திகள்

பாலியல் தொல்லை அளித்த ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு : உயர்நீதிமன்றத்தில் மனு..


பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அம்மனுவில் விசாகா கமிட்டி நிர்வாகிகளை மாற்றக்கோரி எஸ்.பி.ஜெயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

ஐஐி முருகனுக்கு எதிரான இந்த வழக்கில் விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வழக்கை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.