வழக்கறிஞர் சிவகங்கை இரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழா: திராவிடர்கழகத் தலைவர் கீ.விரமணி பங்கேற்பு..

சிவகங்கை மாவட்ட திராவிட கழக பாதுகாப்பாளராகவும்,புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய பகுத்தறிவு மேதை ஐயா இரா.சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படம் திறப்பு, புகைப்பட கண்காட்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்,திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.
நூற்றாண்டு காணும் சிவகங்கை சண்முகநாதன் தலைசிறந்த வழக்கறிஞராக பணியாற்றிய அவர் தந்தை பெரியார் அவர்களிடத்தில் சில ஆலோசனைகளைக் கேட்டுள்ளார்.

திராவிடகழகத் தலைவர் பதவிக்கு யாரையும் நியமனம் செய்ய வேண்டாம் என்று நினைத்திருந்த நிலையில் என்னை அணுகிய என்னை தலைவர் பதவி ஏற்க வைத்தவர் சண்முகநாதன், அதுபோல் திராவிட இயக்க பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார் என சண்முகநாதன் குறித்து பல நினைவுகளை நினைவு கூர்ந்தார்.விழாவில் பொதுவுடமை போராளி விசுவநாதன் உரையாற்றினார்கள்.

விழாவில் பேசிய அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும் போது திடல் என்றாலே பெரியார் திடல்தான், ஆசிரியர் என்றால் ஐயா வீரமணி தான் நினைவு வரும், பெரியார் இயக்க கொள்கைகளை கடைபிடித்து அதை தொடர செய்ய ஐயா சண்முகநாதனின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது பெருமை மிகு தருணம். சிவகங்கையில் திராவிடச் சுடரொளி இராமசந்திரனார் பெயரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்களால் கவனிக்கப்படாமல் இருந்த பூங்காவை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந் தற்போது புதுப்பித்துள்ளார் என்றார்.
வழக்கறிஞர் சண்முகநாதன் குறித்தும் அவர் ஆற்றிய பகுத்தறிவு பணிகள் குறித்து 3 நுால்கள் வெளியிடப்பட்டன.

விழாவில் கவிஞர் பூங்குன்றன். சாமி திராவிட மணி, சிகாமணி, இன்பநாதன், பிரின்ஸ் என் ஆர்.பெரியார்,சிவகங்கை மலர்கண்ணி முன்னாள் தமிழக அரசு செயலாளர் கற்பூர சுந்தரபாண்டியன் ஜஏஎஸ், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந், பிராட்லா,குமரேசன்,பா.மு. சேதுராமன், ராஜாராம், வழக்கறிஞர் வீரசேகரன் கலநந்து கொண்டனர்.
அனைவரும் இயக்க முன்னோடி சண்முகநாதன் அய்யா அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தினர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

காரைக்குடியில் அப்பலோ மருத்துவ குழு சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி:டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

Recent Posts