முக்கிய செய்திகள்

ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியத் தோணல: சாந்தா ஷீலா நாயர்

ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியத் தோன்றவில்லை என தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று (30.04.2018) முன்னாள்  தமிழக அரசின் சிறப்பு செயலாளராக இருந்த சாந்தஷீலா நாயர் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர், செப்டம்பர்23ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் அப்போது தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜெயலலிதா பேசியதாகவும் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார் . மேலும் , ஜெயயலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள முயற்ச்சிக்கவில்லையா ? என ஆணையத்தின் வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்கு ‘எனக்கு தோன்றவில்லை’ என பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஆறுமுகசாமி , எல்லா தகவல்களும் உங்களுக்கு தெரிந்திருக்குமென நினைக்கிறேன். ஆனாலும் ஏதோ காரணத்திற்காக நீங்கள் கூற மறுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செப் 23ம் தேதிக்கு பின்னர் தன்னால் ஜெயலலிதாவை மருத்துமனையில் சந்திக்க இயலவில்லை எனவும் சாந்தஷீலா நாயர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார் .

Shantha Sheela Nayar about Jayalalithaa’s helath