முக்கிய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரழந்தனர். மேலும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்று காலை மூன்று வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமனற்றம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின், அவற்றை பதப்படுத்த வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரையில் உடலை பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.