சித்த மருத்துவத்தில் 5 நாட்களில் குணமாகும் கரோனா: சித்த மருத்துவர்கள் சாதனை..

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாமில் கரோனா நோயாளிகள் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கல்லூரி ஒன்றில் செயல்படும் இந்த மருத்துவ முகாமில் மூலிகைகளால் ஆன முகக்கவசம் வழங்கப்படுவதோடு நோயாளிகளுக்கு நுரையீரல் தொற்றை தடுக்க வெற்றிலை மருந்தும் தேன் மருந்தும் அளிக்கப்படுகிறது.
2 மணி நேரத்துக்கு ஒரு முறை சூப் வகைகள், கசாயங்கள், சிறுதானிய உணவுகள், மண் பானையில் சமைத்து வழங்கப்படுகின்றன.

இதோடு 8 வடிவ நடைபயிற்சி, நிலா சோறு சாப்பிடுதல், குழந்தைகளுக்கு வேப்பிலை ஊஞ்சல் மண்பானையில் ஆவி பிடித்தல் என பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுவது புத்துணர்ச்சி தருவதாக நோயாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நோயாளிகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு விளக்கேற்றி தியான சிகிச்சையும் வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாரம்பரிய சிகிச்சை காரணமாக சிறப்பு முகாமில் சேர்க்கப்படும் நோயாளிகள் 5 நாட்களிலேயே குணமடைந்து வீடு திரும்புவதாக அவர்கள் கூறினர்.

“சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அ.தி.மு.க. அரசு படுதோல்வி”: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…

பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுள் காரணமா? மத்திய அரசு எதற்கு, ராணுவம் எதற்கு? கடவுளே அனைத்தையும் பார்க்கட்டும்: நிதியமைச்சர் மீது சிவசேனா சாடல்….

Recent Posts