முக்கிய செய்திகள்

சித்த மருத்துவம் கரோனாவை குணப்படுத்துமா? : ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு

கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 18 ஆயிரம் போ் பலியாகி உள்ளனா்.

இந்த நோய்த்தொற்றின் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனை சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும்.