சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 400க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ”சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 448 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,812 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை சிங்கப்பூரில் 448 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளிலதான் தற்போது அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் தினமும் 3,000க்கு அதிகமானவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன.
இதுவரையில் நாடு முழுவதும் 2, 94,414 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று அதிகம் உள்ள இடங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தும் முயற்சியில் மே 5 ஆம் தேதி முதல் சிங்கப்பூர் அரசு இறங்கி உள்ளது.
உலகம் முழுவதும் 50, 90,061 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 308,705 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.