சிங்கப்பூரில் இம்மாதம் 13ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிப்பதாக தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் தெரிவித்தது.
கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் திரையரங்குகள் மூடப்பட்டன.
திரையரங்குகள் திறக்கப்படும்போது பாதுகாப்பான இடைவெளிகளில் அமர்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என ஐந்து பேருக்கு மிகாத குழுக்கள் அருகருகே அமர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கூடத்திலும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசங்கள் அணிந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
சில திரையரங்குகள் ஜூலை 15ஆம் தேதி முதல் செயல்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரையரங்குகள் செயல்படுவது தொடர்பான தகவல்களை அவற்றின் இணையப்பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.