சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், இரண்டாம் கட்டமாகப் பல்வேறு நடவடிக்கைகளை இன்றிலிருந்து மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. பூங்காக்கள், கடற்கரைகளுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்புவோர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கத் தேவையில்லை.