குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் இன்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூர் வாழ் அயல்நாட்டு மருத்துவ மாணவி ஹிரண்யா .எஸ் நிதி திரட்டி வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
சிங்கப்பூர் வாழ் அயல்நாட்டு மருத்துவ மாணவி ஹிரண்யா எஸ் (செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மருத்துவ மாணவி) கரோனா பாதிப்பால் பொது மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் அவதிப்படுவதை அறிந்து சிங்கப்பூர் ,சீன மற்றும் இந்தியாவில் உள்ள நண்பர்கள் பலரும் மற்றும் தாய் நாகு வின் உதவியுடன் இணைந்து நிதி திரட்டி இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார் .
2 லட்சம் மதிப்புள்ள இக்கருவிகளை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இன்று காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் தருமர் அவர்களிடம் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க தலைவர் நல்லாசிரியர் பகீரத நாச்சியப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். மருத்துவமனை தலைமை செவிலியர் லக்ஷ்மி, செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் கீதாஞ்சலி, கள பணியாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்