முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

சிங்கப்பூரில் புகழ்பெற்ற தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது..

தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும்.

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது.

தைப்பூசம், நவராத்திரி, கந்த சஷ்டி, லெட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.

இன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், உடலில் அலகு குத்தி பால் காவடி, பறவைக்காவடி எடுத்து தங்கள் நேர்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

பலர் ரதம் பின்னே நடந்து வருகின்றனர். சிங்கப்பூர் போல் மலேசியாவில் பத்து மலை,பினாங்கிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.