கடந்த சில மாதங்களாக கரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப் பொங்கல் திருநாளைப் போல தீபாவளியும் மிக முக்கியமான காலகட்டம்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக் காலத்திற்காக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பர். உள்ளூர்வாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் என மக்கள் கூட்டம் அங்கு நிரம்பி வழிய, தீபாவளி விற்பனை சூடுபிடிக்கும்.
ஆனால், கொவிட்-19 நோய்ப் பரவலாலும் கட்டுப்பாடுகளாலும் வர்த்தகம் வழக்கம்போல் இருக்காது என்பதை கடைக்காரர்கள் அறிந்திருக்கின்றனர்.
மக்களின் பாதுகாப்பு கருதி, இம்முறை கிண்டா சாலையில் தீபாவளி விற்பனைச் சந்தை இராது என்றாலும் இரவில் வண்ணமயமாக ஒளிரும் சாலைகள் பண்டிகை உணர்வை ஏற்படுத்தி, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளன.