முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கிறார் பாடகி சின்மயி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரமில்லை என கூறி அதனை விசாரித்த பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது.

இதனிடையே, பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரமில்லை என எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என விளக்க வேண்டும் என ரஞ்சன் கோகய் மீது புகார் அளித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மீடூ இயக்கத்தின் அடிப்படையில் கவிஞர் வைரமுத்து மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயி, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரை முறையாக விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமக்கு அனுமதி வழங்குமாறு, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.