
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மசூதனன் ரெட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் வழியாக காரைக்குடி சென்ற போது காளாக்கண்மாய் அருகே வந்த ஆட்சியர் கார் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மோதாமலிருக்க காரை திருப்பியபோது கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பியில் மோதி விபத்திற்குள்ளானது.

காரில் பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் சிறு காயத்துடன் தப்பினார். உதவியாளர் மணிகண்டன், கார் ஓட்டுநர் செபஸ்டியான் ஆகியோர் காயமடைந்தனர்.

மாவட்ட ஆட்சியர் உள்பட காயமடைந்த அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்