
சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் வீரமணி என்ற மாணவன் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பாக கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒரு மாணவனாக தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 89 மாணவர்களுடன் சேர்ந்து துபாய் செல்ல இருக்கின்றார்.மாணவன் வீரமணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.
இதுபோல் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவனை தலைமையாசிரியர் அமல்ராஜ் கென்னடி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஒரு கிராமப்புற பள்ளியில் இருந்து ஒரு ஏழை மாணவனை இந்த நிலைக்கு உயர்த்திய தலைலமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் பாராட்டுவோம்.
செய்தி &படங்கள்
சிங்தேவ்