சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்.இந்த சங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கடந்த இரு வருடங்களாக பதவி வகித்தவர்களின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இரண்டு மாத தாமதத்திற்கு பின் வரும் 29-12-24 ஞாயிற்றுக் கிழமை கோவிலூரில் உள்ள தனியார் கெமிக்கல் ஆலை அலுவலகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலை நடத்தும் அலுவலராக வழக்கறிஞர் நோட்டரி பப்ளிக் லெனின்பாரதி நியமனம் செய்யப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது.
தலைவர்,செயலாளர்,இரண்டு இணை செயலாளர்கள்,மூன்று துணை தலைவர்கள்,ஒரு பொருளாளர்,ஏழு செயற்குழு உறுப்பினர்கள் என 15 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
வி.ஆர்.வெங்கடாசலம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார் போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தலைவர் வி.ஆர்.வெங்கடாசலம்.
பாண்டியராஜன்
தற்போது இந்த தேர்தலில் மூன்லைட் அணி செயலாளர் பாண்டியராஜன் மற்றும் நைனாமுகம்மது ஆகியோர் எதிர்த்துப் போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செயலாளர் பதவிக்கு கடந்த இருமுறை பதவி வகித்து வருபவரும் தேவகோட்டை அரசு கருவூல அலுவலக கண்காணிப்பாளருமான சதீஷ்குமார் மற்றும் மூத்த கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சேக் அப்துல்லா போட்டியிடுகிறார்.
பொருளாளர் பதவிக்கு எஸ்.எம்.எஸ்.வி பள்ளி உடற்கல்வி ஆசிரியரும்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தகுதிபெற்ற நடுவருமான சங்கர் மற்றும் முன்னாள் வீரர் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.
கடந்த 30 வருடங்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க பதவிக்கு முயற்சி செய்தும் வர முடியாதது குறிப்பிடத்தக்கது.
வாக்களிக்கும் உரிமை பெற்ற 24 அணிகளின் செயலாளர்களிடமும் போட்டியிடுபவர்கள் வாக்கு சேகரித்து வருவதால் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே தேவகோட்டை அரசு கருவூல அலுவலக கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அரசு பதவியிலிருந்து கொண்டு ஆதாயம் தரும் செலாளர் பதவி வகித்து வருகிறார் இது குறித்து அரசிடம் எதிர் தரப்பினர் புகார் கொடுத்துள்ளதாக எதிர்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .
இதுபோல் அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தொடர்ந்து ஆதாயம் தரும் பதவி வகித்து வருவதை பள்ளிக் கல்வித்துறையில் புகார் அளித்துள்ளாதாக எதிர் தரப்பு அணியினர் சிலர் கூறியுள்ளனர். .
கடந்த காலங்களில் போட்டியின்றி நடைபெற்று வந்த சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தேர்தல் தற்போது கடும் போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் இப்போட்டியில் வெற்றிபெறுவது யாரென்று..பொறுத்திருந்து பார்ப்போம்
செய்தி & படங்கள்
சிங்தேவ்