சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த மர்ப்பொருள் வெடித்தது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.
கீழக்குளம் அரசு பள்ளியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மர்ம பொருளைடிபன் பாஸ் வடிவில் இருந்துள்ளது.
அதை எடுத்து அவர்கள் திறக்க முயன்று திறக்காததால் சாலையில் வீசி எறிந்து திறக்க முயன்ற பள்ளி மாணவர்கள் வைணவன் வயது 8 நவீன் குமார் வயது 13 ராம்கி வயது 11 ஆகிய3 பேர் மர்மப் பொருள் வெடித்து படுகாயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ராம்கி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மர்மப்பொருள் வெடித்த கீழக்குளத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வெடித்த பொருளின் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
காளையார்கோயிலில் நாளை நடைபெறவுள்ள மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் அக்டோபர்-30-ல் பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறவுள்ள இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் சிக்கிய மர்மவெடிபொருள் குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்