சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்..
சென்னை தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிம்சாமி தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலர்கள், நபார்டு வங்கி அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன், சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும்.
3 முக்கியமான துறைகளை பற்றி விவாதிக்க உள்ளோம்.விவசாயத்திற்கான கடனுதவியை உடனுக்குடன் வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும்
தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் பங்கு 30 சதவீதம் ஆகும்.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடியில், தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என கூறினார்.
வங்கிகள் சிறப்பு முகாம்களை அமைத்து உழவர் கடன் அட்டைகளை விரைந்து வழங்கவேண்டும்:
மத்திய அரசின் கூடுதல் கடன் உதவி கிடைக்க வங்கிகள் உதவிட வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.