சிறு சேமிப்பு வட்டியை குறைக்க அரசுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்..

சிறு சேமிப்பு, தபால் அலுவலக சேமிப்பு மற்றும் பிஎஃப் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தை அரசு குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதத்தைவிட இத்தகைய சேமிப்பு களுக்கு கூடுதல் வட்டி கிடைக் கிறது.

இதனால் மக்கள் இந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய் கின்றனர். ஆனால் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் நிதிக் கொள்கை அடிப்படையில் வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன.

அவ் விதம் நிர்ணயிப்பதால் பெரும் பாலும் அவை பிஎஃப், தபால் அலுவலக சேமிப்புகளைக் காட்டி லும் குறைவாகவே உள்ளன.

எனவே இவற்றுக்கான வட்டியைக் குறைப்பதன் மூலம் ஒரே சீரான நிலை உருவாகும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் நிர்ண யிக்கப்பட்ட அதே அளவு வட்டி விகிதம்தான் சிறு சேமிப்புகளுக்கு தொடர்கிறது.

ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுத்த பிறகும் இவற்றுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்ற மும் செய்யப்படவில்லை.

இந்நிலை யில் வங்கிகளும் தங்களிடம் பணம் டெபாசிட் செய்துள்ள வாடிக் கையாளர்களை இழந்துவிடமா லிருக்க வட்டியைக் குறைக்காமல் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித் துள்ளது.

வங்கிகள் சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை பெருமளவு குறைத்தால், வாடிக் கையாளர்கள் அதிக வட்டி கிடைக்கும் பிஎஃப் போன்ற வற்றுக்கு மாறிவிடுவர்.

மேலும், பிஎஃப் சேமிப்புக்கு வரி சலுகை யும் கிடைப்பதால் வாடிக்கையாளர் களுக்கு கூடுதல் ஆதாயம் கிடைக் கிறது என்று வங்கிகள் குறிப் பிடுகின்றன.

கடந்த பிப்ரவரியிலிருந்து இது வரை ரிசர்வ் வங்கி 135 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. ஆனால் வங்கிகள் ஓராண்டுக்கான சேமிப்பு களுக்கு எம்சிஎல்ஆர் அடிப்படை யில் வட்டியை நிர்ணயித்துள்ளன.

சமீபத்தில்தான் பாரத ஸ்டேட் வங்கி 55 புள்ளிகள் குறைத்து வட்டி விகிதத்தை 6.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

மத்திய அரசோ பல்வேறு சேமிப்புகளுக்கு 10 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தை குறைக்க வேண் டும் என வங்கிகள் தொடர்ந்து வலி யுறுத்தினாலும் பொதுமக்களின், கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் அரசு வட்டி குறைப்பு நட வடிக்கையில் ஈடுபடாமல் உள்ளது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை காரணமாக நிதி அமைச்சகம் இதுபோன்ற வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்க தயங்குகிறது.

மேலும் இது அரசியல் சார்ந்திருப்பதால் குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்புகள் மீதான வட்டியைக் குறைக்க தயங்குகிறது.

ஓய்வுக்காலத்தைக் கருத்தில் கொண்டு முதியோர் பலர் சேமிப்புகளில்தான் முதலீடு செய்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி எதிர்கட்சிகள் பேரணி

Recent Posts