காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி தர்மச்சங்கடத்திற்கு ஆளான ஸ்மிருதி இரானி..

The Union Minister for Textiles and Information & Broadcasting, Smt. Smriti Irani interacting with the media regarding the cabinet approval for the Integrated Scheme for Development of Silk Industry, in New Delhi on March 22, 2018.

காங்கிரசை விமர்சனம் செய்வதாக எண்ணி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தர்மச்சங்கடத்திற்கு ஆளான சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக்கூறி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த சில நாட்களில், தனது வாக்குறுதியை நிறைவேற்றியது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் அசோக் நகரில் பரப்புரையில் ஈடுபட்ட ஸ்மிருதி இரானி, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு, வாக்குறுதி அளித்தபடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒருமித்த குரலில், காங்கிரஸ் அரசு தங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக, பதிலளித்தனர்… இந்த வீடியோவை, மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி, டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறது..

.

பொன்பரப்பி வன்முறை சம்பவத்திற்கு பாமக.,வே காரணம் : கள ஆய்வு செய்த குழு பேட்டி

பிரதமர் மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? : மம்தா சவால்..

Recent Posts