முக்கிய செய்திகள்

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் : நாசா கண்டுபிடிப்பு


சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா அறிவித்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது.

விண்வெளியில் உள்ள கோள்களை கண்டுபிடிப்பதற்காக கெப்ளர் விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது. இதில் பொருத்தப்பட்டுள்ள கெப்ளர் தொலைநோக்கியின் மூலம் பூமியை போன்று எடை மற்றும் நட்சத்திரங்களை குறிப்பிட்ட பாதையில் சுற்றி வரும் கோள்களை கண்டுபிடிக்கலாம்.
இந்நிலையில், அக்குடும்பத்தில் 8 வது கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பூமியை போன்று 30 சதவீதம் அதிக எடையில் இருக்கும். இது நட்சத்திரத்தை சில ஒளியாண்டுகள் தொலவில் சுற்றி வருகிறது. கெப்ளர் 90ஐ என்று பெயரிடபட்டுள்ளது. இது அக்குடும்பத்தின் மிகச்சிறிய கோளாகும்.

2016-ம் ஆண்டில் சூரிய குடும்பத்திற்கு வெளியே ஆராய்ச்சி செய்வதற்காக மூன்றாண்டுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது