ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு, கடந்த 5ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறையில் இருந்து வெளியே வர கடந்த 3 வாரங்களாக நீதிமன்றத்தின் மூலம் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில், திகார் சிறையில் ப. சிதம்பரத்தை சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் இன்று காலை சந்தித்தனர்.

ப. சிதம்பரம் எதிர்கொண்டு வரும் வழக்கு விசாரணை விவகாரத்தில் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவிக்கும் விதமாக இருவரும் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், ப. சிதம்பரத்தை சந்திப்பதற்கு அவரது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்திருந்தார்.

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றார் தமிழிசை

“இந்தியா நன்றாகத்தான் இருக்கிறது; வேலையிழப்பு, கும்பல் தாக்குதல் உள்ளிட்டவை தவிர..” : ப.சிதம்பரம் சாடல்

Recent Posts