விரைவில்.. 20 ரூபாய் புதிய நாணயம் : மத்திய அரசு அரசாணை..

புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது.

அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் விளக்கம் ஏதுமில்லை.

தாமிரம், துத்தநாகம், நிக்கல் என்ற உலோகக் கலவையின் விகிதாச்சாரம் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரன்சி நோட்டுகள் சீக்கிரம் பழசாகி கிழிந்தும் சேதமும் அடைந்துவிடுகின்றன.

ஆனால் நாணயங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது.

எனவே நாணயங்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதன் மூலம் சில்லரைத் தட்டுப்பாடுகளும் நீங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

, கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை..

ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு

Recent Posts