தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா பதவி விலகல்…


தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு பணத்தில் தனது சொந்த வீட்டை சீரமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்ய கட்சி கோரிக்கை வைத்திருந்தது..தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா 9 ஆண்டு கால ஆட்சியில் பொருளியல் மெதுவடைந்து விட்டது, ஊழல் குற்றங்கள் பெருகிவிட்டன என்று கூறி ஆளும் ANC கட்சி அவருக்கு அளித்துவந்த ஆதரவை மீட்டுக்கொண்டது. அதனையடுத்து அவர் பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் எனப்படும் ANC கட்சி, தம்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக மிரட்டல் விடுத்ததாய் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார். ஆனால், தாம் ஏன் பதவி விலக வேண்டும் என்ற காரணத்தைக் கட்சி தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்றார் .அவரது பதவி விலகலை அடுத்து, தற்போதைய துணை அதிபர் சிரில் ரமஃபோசா இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பின்னேரத்தில், அவர் தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிபராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி சிபிஐ வழக்குப் பதிவு

புதுச்சேரி – பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது..

Recent Posts